மருத்துவரின் அலட்சியம்.. காது அறுவை சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தால் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி காது அறுவை சிகிச்சைக்கு வந்த ரேகா என்ற பெண்ணுக்கு நரம்புக்கு பதிலாக தமனியில் ஊசி போடப்பட்டது. இதனால் ரேகாவின் வலது கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்தது.

இதை பார்த்த ரேகா உடனடியாக கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி குறித்து மருத்துவமனையில் புகார் அளித்தார். ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இதற்கு கவனம் செலுத்தவில்லை. 

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாறாக அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மிரட்டினர். தவறான சிகிச்சையின் காரணமாக அவர் ஒரு கையை இழந்தது மட்டுமின்றி, நவம்பரில் அவருக்கு நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது. இதனால், வருத்தமடைந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் இதுகுறித்து, கன்கர்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

ஆனால், காவல் துறை இந்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தற்போது நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இந்த சம்பவம்குறித்து அவரது வழக்கறிஞர் ரூபம் தெரிவிக்கையில், 

"இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறார்கள். மருத்துவர்களின்  அலட்சியத்தால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அவரது கையும் துண்டாகியுள்ளது. 

இதற்காக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நோயாளிக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழி வகுக்க வேண்டும்,. இந்த வழக்கில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near behar woman going to ear surgery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->