மேம்பாலத்தில் இருந்து பறந்து விழுந்த இளம்பெண்.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பம்மல் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் கலைச்செல்வி. இவரும், இவருடைய  தம்பி சந்தோஷ்குமாரும் தனியார் டெலிகாம் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இருவரும் சைதாப்பேட்டையில் வசிக்கும் தங்கள் பெரியப்பாவை பார்ப்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதையடுத்து இவர்கள்  மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராதமாக விதமாக சந்தோஷ்குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதனால், நிலை தடுமாறிய சந்தோஷ்குமார் பாலத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் கலைச்செல்வி தூக்கி வீசப்பட்டு சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதைபார்த்த சக வாகன ஓட்டிகள் விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு பள்ளிக்கரனையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai two peoples died for fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->