திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலி.! 35 துண்டுகளாக வெட்டிய காதலன்.!
near delhi boyfriend kill girl friend
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் பணிபுரிந்து வந்தனர். அப்போது இவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது. சில நாட்களுக்கு பிறகு இருவரும் தனது காதலை வீட்டிற்கு தெரியப்படுத்தினர்.
ஆனால், அதற்கு அவர்களது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததனால், இருவரும் டெல்லிக்கு சென்று அங்குள்ள மெஹ்ராலி பகுதியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், ஷ்ரத்தா அப்தாபிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். அதற்கு அப்தாப் காலம் தாழ்த்தி வந்தார். பின்பு இது தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்தாப் கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து, பின்னர் ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக அறுத்துள்ளார்.
அந்த துண்டுகளை, ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி அதன் உள்ளே வைத்து 18 நாட்களாக டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொரு துண்டுகளாக தூக்கி எறிந்து உள்ளார். இதற்கிடையே ஷ்ரத்தாவின் குடும்பம் சமூக வலை தளங்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்துள்ளது.
இதையடுத்து, அவரது தந்தை ஷ்ரத்தாவை பார்ப்பதற்காக டெல்லிக்கு வந்தார். ஆனால், அங்கு அவரை தொடர்பு கொள்ள முடியாததால் அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.
English Summary
near delhi boyfriend kill girl friend