குஜராத் : நீதிபதி மீது கல்வீச்சு நடத்திய குற்றவாளி - மூன்று போலீசார் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சரி மாவட்டத்தில் கீழமை அமர்வு நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் நேற்று கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மேஷ் ரதோட் என்ற நபர் ஆஜர்படுத்தப்பட்டார். 

அவரிடம் கூடுதல் அமர்வு நீதிபதி ஏஆர் தேசாய் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, திடீரென தர்மேஷ் தான் மறைத்து வைத்திருந்த கல்லை எடுத்து நீதிபதியை நோக்கி வீசினார். 

அதைப்பார்த்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட நீதிபதி தேசாய் கல் வீச்சு தாக்குதலில் இருந்து தப்பினார். அதன் பின்னர், தர்மேஷை அங்கிருந்த போலீசார்  தடுத்து நிறுத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக தர்மேஷ் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக பணியை சரிவர மேற்கொள்ள வில்லை என்று மூன்று போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near gujarat accuest attack to justice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->