ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை -  2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் உள்ளிட்டோர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 

இந்த துப்பாக்கிச் சண்டை புட்காம் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இடத்தில் மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jammu kashmeer two terorists died for gun shoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->