ஜார்கண்ட் || ஆண் நண்பருடன் சென்ற ஐ.டி பெண்.! மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம்.!  - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பும் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். 

இவர்களை 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் நடுவழியில் மறைத்து, ஆண் நண்பரை அடித்து, தாக்கி விட்டு அந்த இளம்பெண்ணை மறைவான இடத்திற்கு கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. 

இதையடுத்து அந்த கும்பல் இளம்பெண்ணிடம் இருந்த மொபைல் போன் மற்றும் பர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்து சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, அந்த பெண் வீட்டிற்கு வந்து தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இளம்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jarkant it company woman employe sexualy haassment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->