கர்நாடகா : பெங்களூருவில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை.!
near karnataga 112 feet adi yogi statue in banglore
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டம் நந்திமலை அருகே ஈஷா அறக்கட்டளை சார்பில் யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த யோகா மையத்தில் சுமார் 112 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலையை போன்று, அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த சிலை நேற்று ஈஷா நிறுவனர் சத்குரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் திறக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை முப்பரிமாண ஒளி மற்றும் ஒலி காட்சியாக விவரிக்கும் "ஆதியோகி திவ்ய தரிசனம்" நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்கு முன்னதாக, ஆதியோகி சிலைக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்திற்கு சத்குரு பிரதிஷ்டை நடைபெற்றது.
மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில், ஆதியோகி மட்டுமின்றி, லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா லீடர்ஷிப் அகாடமி உள்ளிட்ட கட்டமைப்புகளும் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
near karnataga 112 feet adi yogi statue in banglore