கர்நாடகா : குடிபோதையில் தகராறு செய்த கணவனை சங்கிலியால் கட்டிப்போட்ட அவலம்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டம் ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தா. இவரின் கணவர் ரங்கநாத். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்த இவர் மனைவியுடன் சேர்ந்து, ஹர்த்திகோட் என்ற பகுதியில் வசித்து வந்தார். நாளடைவில் மதுபோதைக்கு அடிமையான ரங்கநாத், அடிக்கடி மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அமிர்தா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த ரங்கநாத் நேற்று முன்தினம் மனைவியை அழைத்து வருவதற்காக ஒசூர் கிராமத்திற்கு குடிபோதையில் சென்றார். 

அங்கு அவர் வீட்டின் முன்பு நின்று மனைவியை அழைத்துள்ளார். இதை பார்த்து வெளியே வந்த அமிர்தாவின் தந்தை உமேஷிடம் ரங்கநாத் தகராறு செய்துள்ளார். 

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அமிர்தா, வீட்டில் இருந்த நாய் சங்கிலியை எடுத்து வந்து ரங்கநாத்தின் கை மற்றும் கால்களை கட்டியுள்ளார். இதையடுத்து ரங்கநாத் தன்னை அவிழ்த்துவிடும் படி, கத்தி கூச்சலிட்டுள்ளார். 

இதை கண்ட அந்த பகுதியினர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga wife chained up to husband for problam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->