ஒரே ஒரு ப்ரைடு ரைஸ்.. மொத்த ஓட்டலும் காலி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு சுற்றுலா தலத்தில் பிரசாந்த் என்பவர் ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர்.  இவர் அங்குள்ள ஓட்டலில் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்துவிட்டு சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தார்.

அப்போது ஊழியர்கள் பிரைடு ரைஸ் தயாரித்து கொண்டு வர தாமதம் ஆனது. சிறிது நேரம் கழித்து மணிகண்டன், ஓட்டல் உரிமையாளர் பிரசாந்திடம் கேட்டார். 

அதற்கு அவர் சிறிது நேரம் காத்திருக்கும்படி தெரிவித்தார். ஆனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரம் அடைந்த மணிகண்டன், ஓட்டலில் இருந்துகொண்டு தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்தார். அனைவரும் வந்ததும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் ஓட்டலையும் அடித்து நொறுக்கினர். 

இந்த விபத்தில், ஓட்டல் உரிமையாளர் பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஜான் பீட்டர், தாமஸ், சின்னப்ப ராஜ் உள்ளிட்டோரையும் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala young boys attack hotel owner


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->