ம. பியில் பரபரப்பு.! ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை - மீட்பு பனி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தார்பூர் மாவட்டம் லால்குவான் பாலி கிராமத்தை சேர்ந்தவர் மூன்று வயது பெண் குழந்தை ரினா. இவர் நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தார். 

அப்போது, அவர் அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.  

அந்த தகவலின் படி, போலீசார் தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலில், குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. 

அதன் பின்னர் மீட்புப் படையினர் கிணறுக்கு அருகில் குழித்தோண்டி குழந்தையை பத்திரமாக மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh girl fell down in borehole


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->