மத்திய பிரதேசம் : வரதட்சணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் நகர் ராதாகிருஷ்ணா காலனியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், ஓராண்டுக்குள் அந்த பெண்ணிடம் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமை செய்துள்ளனர். 

அதன் பின்னர், அந்த பெண்ணின் கணவரும் அவரை இயற்கைக்கு மாறான உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளார். 

இதையடுத்து அந்த பெண், தனது பெற்றோரிடம் நடந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். இதையறிந்த, அந்த பெண்ணின் பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். 

அந்த புகாரில், "வரதட்சணை வாங்கி வராததற்காக தனது பெண்னிடம் கொடுமை படுத்தும் செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக அந்த நபரை தேடி சென்றுள்ளனர். ஆனால், அந்த நபர் வீட்டை பூட்டி விட்டு தப்பியோடிய விவரம் பின்னர் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh wife complaint against husband


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->