திருமணம் நின்றதால் மகளை கொலை செய்த சம்பவம் - 5 பேர் கைது.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாந்தெட் மாவட்டம் பிம்ப்ரி மகிபால் கிராமத்தை சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த். ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்த இவருக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு அவருடைய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். 

ஆனால், மாணவி வேறு நபரை காதலித்து வந்ததால், பெற்றோர் பார்த்திருந்த மாப்பிள்ளையிடம் தான் வேறு நபரை காதலிப்பது குறித்து தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மாணவிக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த திருமணம் நின்றது. இதனால் அவரது பெற்றோருக்கு மாணவி மீது ஆயிரம் ஏற்பட்டது.

இந்தநிலையில் மாணவி திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் மாணவியின் குடும்பத்தாரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது. 

அதாவது, "திருமணம் நின்று போனதால் மாணவியின் மீது ஆத்திரத்தில் இருந்த அவரது குடும்பத்தினர், கடந்த மாதம் 22-ந்தேதி இரவு மாணவியை அவரது தந்தை, அண்ணன், மாமா உள்ளிட்டவர்கள் வயலுக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவர்கள் கயிற்றைக்கொண்டு மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன் பின்னர் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக மாணவியின் உடலை எரித்து அங்கிருந்த கால்வாயில் சாம்பலை கரைத்தது தெரியவந்தது. 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, மாணவியின் தந்தை, அண்ணன், மாமா மற்றும் குடும்பத்தினர் என்று மொத்தம் ஐந்து பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra five peoples arrested for woman kill case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->