மகாராஷ்டிரா : அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா கிழக்கு சீதா சதன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் வாடகைக்கு வந்தனர். 

இந்த நிலையில், அந்த வீட்டில் இருந்து நேற்று முன்தினம் திடீரென துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் துலின்ஞ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அங்கு பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் மேகா என்பதும், அவருடன் வசித்து வந்தவர் ஹர்திக் ஷா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், ஹர்திக் ஷா தான் பெண்ணை கொலை செய்து விட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பி ஓடியதாக தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி, போலீசார் ஹர்திக் ஷா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றனர். அங்கு உள்ளூர் போலீசாரின் உதவியுடன் போலீசார் ஹர்திக் ஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra husband arrested for kill wife


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->