மகாராஷ்டிரா : ரூ.700 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி செய்த தம்பதி .!
near maharastra seven hundrad crores cryptocurrency fraud
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரி காரத். இவர் மனைவி தீப்தி கார்த். இவர்கள் இருவரும் அந்த பகுதியில், கிரிப்டோகரன்சி முதலீட்டை அதிகளவில் ஈர்த்து வந்தனர்.
அதாவது, இவர்கள் அங்குள்ள பொதுமக்களிடம் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று செய்தியை தெரிவித்தனர். இந்த செய்தியை அங்குள்ள பலர் உண்மை என்று நம்பி அவர்களிடம் முதலீடு செய்தனர்.
இந்நிலையில், இவர்களிடம் முதலீடு செய்து நஷ்டமடைந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை பார்த்த போலீசார் இவரைப் போன்று இன்னும் பலர் இந்த கிரிப்டோவில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கலாம் என்று உணர்ந்தனர்.
இதற்காக போலீஸ் தரப்பில் இருந்து, பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, கிரிப்டோவில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம், ஒரே நாளில் மாவட்டம் முழுவதிலிருந்து 101 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், சுமார் 10 ஆயிரம் பேர் ரூ.700 கோடி வரை இந்த மோசடியில் இழந்திருக்கலாம் என்று கருதிய போலீசார், காரத் தம்பதியின் மீதான இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் காரத் போலீசில் அளித்த புகாரின் மூலம் இந்த வழக்கில் மற்றொரு அதிர்ச்சி உண்டாகியுள்ளது. அவர் அளித்தப் புகாரில் தெரிவித்துள்ளதாவது,
"தனது கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சுமார் 10 கோடி ரூபாய் முதலீடு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் மற்றும் மேலும், 20 பேர் தன்னை நான்கு நாட்கள் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தனர்.
அப்போது, தனது சில சொத்துகள் மற்றும் நிலங்களை விஜய் ஜோல் பெயரில் மாற்றுவதற்கு கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தியதாக" தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் கோரண்டியல் தெரிவித்ததாவது, "அர்ஜுன் கோட்கரும் அவரது ஆட்களும் காரத்தை பிணை கைதியாக பிடித்து வைத்து துன்புறுத்தியதன் மூலமாக சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அர்ஜுன் கோட்கரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
near maharastra seven hundrad crores cryptocurrency fraud