கள்ளத்தொடர்பில் இருந்த தந்தை..! தடம் தெரியாமல் அழித்த மகன்கள் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் தனஞ்செய். இவர் ஸ்னாக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு சுஜித், அபிஜித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் தனஞ்செய்க்கு சமூகவலைத்தளம் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அந்தப் பெண்ணுடன் தனஞ்செய் சாட்டிங் செய்து வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பாக மாறியது. இதை அறிந்த தனஞ்செய்யின் குடும்பத்தினர் கள்ளத்தொடர்பை கைவிடும்படி பல முறை கூறியுள்ளனர். ஆனால் தனஞ்செய் அதை நிறுத்தவில்லை. 

இதன்னால், ஆத்திரமடைந்த தனஞ்செய் இரண்டு மகன்களும் அவரை கொலை செய்வதற்கு திட்டம் போட்டனர். அதன்படி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனஞ்செயை இரண்டு மகன்களும் இரும்பு கம்பியால் தலையில் தாக்கியும், தலையணையால் முகத்தை மூடியும் கொலை செய்தனர். அதன் பின்னர் அவரின் உடலை இந்திராயணி ஆற்றின் அருகே எரித்து, அந்த சாம்பலை ஆற்றில் வீசி விட்டனர். 

இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் தனது தந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தனஞ்செயின் செல்போனை ஆய்வு செய்ததில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்தனர். பின்னர், அந்த பெண்ணிடமும் விசாரணை செய்ததில், "உயிருக்கு ஆபத்து இருப்பதாக பலமுறை தனஞ்செய் தன்னிடம் கூறியுள்ளார்" என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் புகார் அளித்த இரண்டு மகன்களிடம் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra two sons arrested for kill father


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->