மனைவி மீது சந்தேகம் - பிறந்த குழந்தையை தரையில் தூக்கி எறிந்த தந்தை கைது.!
near maharastra youngman arrested for born baby threw
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி மாவட்டம் சாவர்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரிஷ். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிரதிக்சா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கிரிசுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், பிரதிக்சா கர்ப்பமாகி நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில், இருந்த போதும், கிரிஷ் பிரதிக்சாவை போனில் தொடர்பு கொண்டு சண்டை போட்டு வந்துள்ளார்.
இதையடுத்து பிரதிக்சாவுக்கு கடந்த 30-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தகிரிஷ், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார். இதுதொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கிரிஷ் பச்சிளம் குழந்தை என்று பார்க்காமல் தூக்கி தரையில் வீசினார். இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கிரிசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தந்தை தூக்கி வீசியதால் காயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் குழந்தையை தூக்கி எரிந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near maharastra youngman arrested for born baby threw