மத்திய பிரதேசம் : நொடியில் தரைமட்டமான பாஜக நிர்வாகியின் ஓட்டல்.!
near mathya piradesh bjp president hotel demolished
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள மகாரோனியா பகுதியருகே பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்ரி சந்த் குப்தாவின் "ஜெய்ராம் பேலஸ்" என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலை நேற்று மாலை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர்.
இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு கவுன்சிலரான கிரண் யாதவ் என்பவரிடம் 83 வாக்குகள் வித்தியாசத்தில் குப்தாவின் மனைவி மீனா தோற்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கிரணின் மருமகனான ஜெகதீஷ் யாதவ் என்பவரை திட்டமிட்டு கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி சந்த் காரை ஏற்றி படுகொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சந்த் உள்பட எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 5 பேரை கைது செய்துள்ள நிலையில், சந்த் தப்பித்துச் சென்றுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அவரது ஓட்டலை இடித்து தள்ளுவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தது.
அந்த உத்தரவின் பேரில், இந்தூரில் இருந்து சிறப்பு குழு ஒன்று ஓட்டலை இடிப்பதற்கு சென்றது. அதன் படி, ஓட்டலில் 60 டயனமைட் எனப்படும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை இணைத்து, ஓட்டல் இடித்து தள்ளப்பட்டது.
English Summary
near mathya piradesh bjp president hotel demolished