அமைச்சரை அவதூறாக பேசிய தொண்டர்.! கட்சியில் இருந்து தூக்கிய முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அங்கு அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், சுர்க்கி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் கோவிந்த் சிங் ராஜ்புத். 

இந்நிலையில், அமைச்சரைப் பற்றி கட்சியில் இருந்த ராஜ்குமார் சிங் தனோரா என்பவர் அவதூறாக பேசியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல், சமூக ஊடகத்திலும் சில பதிவுகளை அவர் வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா உடனடியாக, தனோராவை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனோரா, சாகர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். 

அப்போது, இந்த ஒழுங்கு மற்றும் விதிமுறைகள் எல்லாம் சிறிய தலைவர்களுக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளதா? என்று நிருபர்களை பார்த்து கேள்வி கேட்டார். பின்னர், மத்திய பிரதேச அரசு, அதிகாரிகளால் நடத்தப்படுகிறது என்று முன்பு கைலாஷ் விஜயவர்க்கியா கூறினார். முன்னாள் முதலமைச்சர் உமா பாரதி, மதுபான தடை இயக்கம் பற்றி பேசினார். அவர்கள் மீது ஒழுங்கீனத்திற்காக, கட்சியில் இருந்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 

ஆனால், சிறிய தொண்டர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது முறையா? இதற்கு மாநில தலைமையகம் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, அவர் அழுது கொண்டே தெரிவித்ததாவது, தவறு ஏதேனும் செய்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விசுவாசமுடன் கட்சியில் 30 ஆண்டுகளாக செலவிட்டுள்ளேன். 

ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து என்னை நீக்கி விட்டனர் என்று வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் இருந்து நீக்குவதற்கு அடிப்படையாக இருந்த சமூக ஊடக பதிவை தனோரா நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mathya pradesh bjp volunteer dismiss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->