மத்திய பிரதேசம் || காப்பகத்தில் மூன்று குழந்தைகளின் பெயர், மதம் மாற்றம் - தேசிய குழந்தைகள் ஆணையம்.!
near mathya pradesh children home three children name and religion change
சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன் பின்பு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்த ஆய்வில் காப்பகத்தில் உள்ள மூன்று பெண் குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, அவர்களின் பெயரில் புதிய ஆவணங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த செயலை காப்பகத்தினை நடத்தி வருபவர் யாரோ ஒரு சிலருக்காக செய்துள்ளார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் இளம்பெண்களை விலைக்கு வாங்கி, விற்பது பற்றி தகவல் தெரிய வந்தது. அதுகுறித்து விசாரணைக்கு சென்ற போது, அந்த இளம்பெண்கள் கட்டாயத்தின் பேரில் விபசாரத்தில் தள்ளப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த சிறுமிகளின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தால், அங்கு சிறுமிகளின் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் காணவில்லை. இதன் காரணமாக அவர்களும் விபசாரத்தில் தள்ளப்பட்டு இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், அந்த கிராமத்தில் இருந்து சுமார் 27 இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்த கிராமத்தில் மிகப் பெரிய அளவில், கும்பலாக பெண்களை விபசாரத்திற்கு விற்கும் அவலங்கள் நடந்துள்ளது" என்றும் பிரியங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
English Summary
near mathya pradesh children home three children name and religion change