பழங்குடியினர் நிலங்களை மோடி தாரை வார்க்க விரும்புகிறார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரையைத் தொடங்கினார். 

அதன் பின்னர் அவர் கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா என்று தென் மாநிலங்களில் பாதயாத்திரை நடத்தியதில்,  தற்போது மராட்டிய மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் ஜல்கான் ஜமோத் என்ற இடத்தில் பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:- "பழங்குடியினர்கள் தான் இந்த நாட்டின் முதல் உரிமையாளர்கள் என்று என்னுடைய பாட்டி இந்திரா காந்தி கூறுவார். நாட்டில் பிற குடிமக்களைப் போன்று அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது. 

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்த போது, இவர்களின் நலனுக்காகவும், இவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காகவும், கொண்டு வந்த பஞ்சாயத்துகள் சட்டம், வன உரிமைச்சட்டம், நில உரிமைகள் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது.

இத்திமட்டுமல்லாமல், பிரதமர் மோடி பழங்குடியின மக்களை வனவாசிகள் என்று அழைக்கிறார். ஆதிவாசி என்ற வார்த்தைக்கும், வனவாசி என்ற வார்த்தைக்கும் பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு. நீங்கள் வனவாசி என்றால் காட்டில்தான் வாழ முடியுமே தவிர நகரங்களில் வாழ முடியாது. அத்துடன், நீங்கள் மருத்துவராகவோ, என்ஜினீயராகவோ ஆக முடியாது. 

வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்க முடியாது. பிரதமர் மோடி பழங்குடியினர் நிலங்களை எடுத்து, தனது நண்பர்களுக்கு தாரை வார்க்க விரும்புகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டங்களையெல்லாம் தீவிரப்படுத்துவோம். உங்கள் நலனுக்காக புதிய சட்டங்களை இயற்றுவோம்.

நீங்கள் இந்த பழங்குடி மக்களின் கலாசாரத்தையும், வரலாற்றையும் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களால் இந்த நாட்டை புரிந்து கொள்ள முடியாது" என்று ராகுல் காந்தி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mathya pradesh ragul gandhi speach in Tribal women labor function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->