மும்பை அருகே ஆறு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து - ஒருவர் பலி.!
near mumbai fire accident in pizza store
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகர் காட்கோபர் பகுதியில் 'விஸ்வாஸ்' என்ற ஆறு மாடி கொண்ட ஒரு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பீட்சா கடை மற்றும் மருத்துவமனை உள்ளது.
இந்நிலையில், இந்த கட்டிடத்தில் நேற்று பிற்பகல் சுமார் இரண்டு மணி அளவில் பீட்சா கடை பகுதியில் உள்ள மீன் மீட்டர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ பீட்சா கடை முழுவதும் பரவி, அருகிலுள்ள மருத்துவமனை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருபத்திரண்டு பேர் மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் அருகே உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பலமணி நேர போராடி தீயை அணைத்த பின்னர், பீட்சா கடையில் குரோஷி தேதியா என்ற நபர் உயிரிழந்து கிடந்தார். மேலும் இந்த தீவிபத்தில் நோயாளிகளை மீட்ட நான்கு போலீசார் உள்பட பத்து பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near mumbai fire accident in pizza store