மும்பை : விடுதியில் உணவு சாப்பிட்ட 137 பக்தர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே பண்டர்பூரில் புகழ் பெற்ற விட்டல் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரசித்த நிகழ்ச்சியான மகி ஏகாதசியை முன்னிட்டு சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 137 பக்தர்கள் வருகை புரிந்தனர். 

அதன் படி, கோவில் வளாகத்தில் உள்ள புனித நிலோபர் மடத்தில் தங்கி இருந்த இவர்களுக்கு 'பகர் அம்தி' என்ற உணவு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட பின்னர் அவர்கள் அனைவரும் மடத்தில் படுத்துறங்கினர். 

இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும் நள்ளிரவு 2 மணி அளவில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைப்பார்த்த விடுதி ஊழியர்கள் உடனடியாக அவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இவர்களில் எண்பத்து ஒன்பது பேர் உள் நோயாளிகளாக மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இரவில் பக்தர்கள் சாப்பிட்ட உணவு விஷத்தன்மையாக மாறியதால், அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து, அதிகாரிகள் உணவு மாதிரியை கைப்பற்றி, பரிசோதனைகாகா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உணவு விடுதி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai one hundard and thirty seven devotes vomiting in hostel after food eating


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->