மும்பை : வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் - தீவிர தேடலில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகர் குர்லா பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் கடந்த 30 ஆம் தேதி (புதன் கிழமை) இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன் பின்னர், அந்த கும்பல் இயற்கைக்கு மாறாக வன்கொடுமையையும் செய்தனர்.

மேலும், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் சிகிரெட்டால் சூடு வைத்தும் மார்பு மற்றும் கைகளை கூர்மையான ஆயுதண்களைக் கொண்டு மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். 

அத்துடன் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்தது மட்டுமல்லாமல், அந்த வீடியோவை வைத்து மிரட்டியும் உள்ளனர்.

ஆனால், அந்த பெண் தனக்கு நடந்த கொடூரத்தைப் பற்றி அருகில் வசிக்கும் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் இன்று சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் வீடு புகுந்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் மூன்று பேரும் அதே பகுதியில் வசிப்பர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai police search three peoples for suxuall case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->