யார் தடுத்தாலும் நான் போயே தீருவேன்.. 28 கி.மீ நடந்து சென்று திருமணம் செய்த வாலிபர்.!
near odisa groom walked 28 km to marriage venue
ஒடிசா மாநிலத்தில் உள்ள ரயஹடா மாவட்டம் பருதிபேடு கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் நரேஷ். இவருக்கும் அதே மாவட்டத்தில் உள்ள டிபல்படு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அதன் படி திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. அதற்காக நரேஷின் குடும்பத்தினர் சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு செல்ல இரண்டு வேன்களை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அந்த நேரத்தில், மாநிலம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மணமகன் நரேஷ் தனது திருமணத்திற்கு செல்ல முடியாத நிலை உருவானது.
தனது திருமணத்திற்கு பல்வேறு தடைகள் வந்தபோதும் மனம் தளராத நரேஷ் பெண்ணின் வீட்டிற்கு நடந்தே செல்வதற்கு முடிவு செய்து, 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு மணமகனின் குடும்பத்தினர் நடந்தே சென்றனர்.
அதன் பின்னர் நரேஷுக்கு நிச்சயம் செய்த படி, வெள்ளிக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. மாநிலத்தில் கார் ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினாலும் திருமணத்திற்காக 28 கிலோமீட்டர் நடந்து சென்று மணமகளை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near odisa groom walked 28 km to marriage venue