புதுவை அருகே வீட்டில் நடத்தி வந்த மதுபான தொழிற்சாலை - கூண்டோடு பிடிபட்ட அதிர்ச்சி சம்பவம்.!
near puthuchery fake liquar mill found
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சின்னபாபுசமுத்திரம் செல்லும் சாலையில் அரியூர் ஏரிக்கரை பகுதியில் அரியூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டில் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் லாரியில் கொண்டு வரப்படும் எரிசாராயத்தில் சில பொருட்களை கலந்து மதுபாட்டில்களில் பிடித்து, புதுவை மதுபான லேபிள் ஒட்டப்பட்டு தமிழக பகுதிக்கு கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
அந்த தகவலின் படி, நேற்று இரவு கலால் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி லேபிள் ஒட்டப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 250 பெட்டி பீர் மற்றும் குவார்ட்டர் பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், "அந்த மதுபாட்டில்கள் அனைத்தும் வைக்கோல் லாரி மூலம் தமிழக பகுதிக்கு கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்ய வந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையே இந்த இடத்தின் உரிமையாளர் திடீரென காணாமல் போனதால், போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்த நபர் ஒரு போலி மதுபான தொழிற்சாலையை நடத்தி வந்தாரா? அல்லது அந்த இடத்தை வாடகைக்கு எடுத்து வெளிநபர்கள் யாராவது நடத்தி வந்தனரா? என்று கலால் துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near puthuchery fake liquar mill found