டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்ற அம்புலன்ஸ்.! சிகிச்சை இல்லாமல் உயிரிழந்த பெண்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டம் தனப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேஜ்யா. இவர் நேற்று வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த குடும்பத்தினர்கள் தனியார் ஆம்புலன்ஸ்-க்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் தேஜ்யாவை ஏற்றிய உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, செல்லும் வழியில் ஆம்புலன்ஸ்  டீசல் தீர்ந்ததால் திடீரென நடுரோட்டில் நின்றுவிட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆம்புலன்சை மருத்துவமனைக்கு தள்ளிக்கொண்டு சென்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் செல்வதற்கு தாமதமானதால் மயக்க நிலையில் தேஜ்யா பரிதாபமாக உயிரிழந்தார். 

 இந்த சம்பவம் தொடர்பாக தேஜயாவின் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆம்புலன்ஸ் டீசல் இல்லாமல் நின்றதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajastan ambulance without diesel woman died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->