ராஜஸ்தானில் ஹிந்து பெண் மீது துப்பாக்கி சூடு - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் இளம் பெண் ஒருவர் மீது சிலர் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில், அந்த பெண்ணின் கணவருடைய சகோதரரே தனது நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அந்த பெண்ணை தாக்க முடிவு செய்துள்ளார். 

இந்நிலையில் அப்துல் அஜீஸ், அவருடைய நண்பர்களான முகமது ராஜா மற்றும் ராஜூ மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காலிம் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆலோசனை செய்த பின்பே, துப்பாக்கியால் சுட வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். 

இதுகுறித்து துணை ஆணையாளர் வந்திதா ராணா தெரிவித்துள்ளதாவது, "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஜெய்ப்பூர் போலீசார், நேற்றிரவு தீவிர தேடலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களுடன், தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தது, மட்டுமல்லாமல், தப்பியோடிய அபித் என்ற மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajastan four peoples gun shoot on wooman


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->