பாஜக ஆங்கில மொழியை எதிர்க்கிறது - ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி.!
near rajasthan congrass senior leader ragulganthi press meet
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரகுல்காந்தி குமாரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஆல்வாரில் செய்தியாளர்களை சந்தித்த ரகுல்கந்தி பேசியதாவது:- "பா.ஜகாவில் எங்களை எதிர்க்கும் தலைவர்கள், எந்த இடத்திற்கு சென்றாலும் ஆங்கிலத்திற்கு எதிராக பேசுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள்.
பள்ளியில், பெங்காலி இருக்கலாம், இந்தி இருக்கலாம், ஆனால் ஆங்கிலம் மட்டும் இருக்கக்கூடாது என்பதே அவர்களுடைய நோக்கம்'. பாஜகவில் உள்ள தலைவர்களிடம் உங்களுடைய பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? என்று கேட்டுப்பாருங்கள்.
அமித்ஷா முதல் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவருடைய குழந்தைகளும் ஆங்கில வழிக்கல்வி உடைய பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். 'மாணவர்கள் இந்தியையோ, பெங்காலியையோ படிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. இந்தி, தமிழ் என்று அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க வேண்டும்.
ஆனால் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து என்று வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். உலகத்தோடு போட்டிபோட இந்தி உதவாது ஆங்கிலம் தான் உதவும். அதனால், மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆகவே, ஏழை மக்களின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்று அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ளவர்களுடன் போட்டிபோட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்" என்று தெரிவித்தார்.
English Summary
near rajasthan congrass senior leader ragulganthi press meet