காதலிக்கு திருமணம் - சோகத்தில் மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
near rajasthan school student sucide for love
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் யாஷ் வியாஸ். அருகிலுள்ள பள்ளியில் படித்து வரும் இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவியுடன் காதல் வசப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த மாணவிக்கு திடீரென்று மற்றொருவருடன் திருமணம் நடந்து விட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும், அதிர்ச்சி அடைந்த யாஷ், சில நாட்களாக யாருடனும் பேசாமல் வருத்தத்துடனேயே இருந்தார்.
இருப்பினும், சோகத்தில் இருந்து மீளாத அவர், தனது சமூக வலைதள பக்கத்தில், காதலியின் திருமண தகவல் அறிந்து வேதனையடைந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து சோகத்தில் இருந்த யாஷ் மகாத்மா காந்தி மருத்துவமனையில் தன்னை துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.
இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும், உயர் சிகிச்சைக்காக உதய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு யாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
English Summary
near rajasthan school student sucide for love