காதலுக்காக பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியை.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூரில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் மீரா. இவர் மாணவர்களுக்கு விளையாட்டுகள் குறித்த பயிற்சி அளித்து வருகிறார். அந்த பயிற்சியின் போது கல்பனா பவுஸ்தார் என்ற மாணவியை சந்தித்துள்ளார். 

கல்பனா மாநில அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்றவர் என்றும், தற்போது நடைபெற இருக்கும் சர்வதேச கபடிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜனவரி மாதம் துபாய் செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், கல்பனாவும் மீராவும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததனால், மாணவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், மீரா என்ற தன்னுடைய பெயரை ஆரவ் குந்தல் என்று மாற்றி உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து மீரா என்ற ஆரவ் தெரிவித்ததாவது, ``காதல் நியாயமானது என்பதால் தான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன். நான் பிறந்தது என்னவோ ஒரு பெண்ணாக தான், ஆனால் எப்போதும் என்னை ஆணாகவே கருதினேன்.

இதற்காக பாலினத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எனது விருப்பப்படி கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம், எனது முதல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார். 

பின்னர், இது குறித்து கல்பனா தெரிவித்ததாவது,``ஆரவ்வை நான் ஆரம்பத்திலிருந்தே. அதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு அவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் அறுவை சிகிச்சை செய்தபோது நானும் அவருடன் சென்றிருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களின் காதலை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு கிராம மக்களின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajasthan teacher Gender surgery for love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->