சத்தீஸ்கர் : சாமியார்களை தூக்கி போட்டு பந்தாடிய இளைஞர்கள்.! நடந்தது என்ன?. - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் பிளாய்திரி பகுதியில் உள்ள பஸ்திக்கு மூன்று சாமியார்கள் சென்றுள்ளனர். காவி உடையில் இருந்த சாமியார்களை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களைக் கடுமையாக தாக்கினர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது, "குழந்தைகளுடன் சாமியார்கள் பேசியதனால் குழந்தை திருடர்கள் என்று சந்தேகபட்டு இளைஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர்" என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sateeskar young mans attack three peoples for child thief


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->