தெலுங்கானா : சிறுவனின் உயிரை பறித்த வெளிநாட்டு சாக்லேட்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கங்கர் சிங். இவர் மகன் சந்தீப் சிங். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியேவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த கங்கர் சிங், மகன் சந்தீப் சிங்கிற்காக ஆசையாக சாக்லெட் வாங்கி வந்துள்ளார்.

இதையடுத்து, சந்தீப் சிங், நேற்றுமுன் தினம் தந்தை வாங்கி வந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால், சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

அதன் பின்னர், சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "உயிரிழந்த சிறுவனின் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து சாக்லெட் வாங்கி வந்திருக்கிறார். சாக்லேட் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை பத்து மணியளவில் பள்ளியில் சாக்லேட் சாப்பிடும் போது, அது தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே அந்த சிறுவனை வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து, குடும்பத்தினர்கள் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பதால், இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்று  தெரிவித்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana two years old children died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->