மேடையில் மாணவிகளுடன் குத்தாட்டம் போட்டு அசத்திய அமைச்சர் ரோஜா.!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

அம்மாநிலத்தின் அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக நடிகை ரோஜா உள்ளார். 

இந்நிலையில், நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு களித்தார். 

அப்போது, திடீரென அமைச்சர் ரோஜா மேடை  மீது ஏறி மாணவிகளுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி அசத்தினார். நடனம் ஆடி விட்டு இறுதியில்  மாணவிகளை நோக்கி தனது கைகளால் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேடையில், மாணவிகளுடன் சேர்ந்து அமைச்சர் ரோஜா நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupati minister roja participate in cultural dance programme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->