உ.பி || ஒரு வீட்டில் ஒரு நாய் மட்டுமே... அதிரடி உத்தரவிட்ட காசியாபாத் மாநகராட்சி..! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் வளர்ப்பு நாய் கடிக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக, பிட்புல் உள்ளிட்ட மூன்று இனத்தை சேர்ந்த நாய்களை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க காசியாபாத் மாநகராட்சி தடை விதித்துள்ளது. 

இந்த மாத தொடக்கத்தில் லிப்டில் சென்ற நபரையும், குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிறுவனையும் வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிட்புல் என்ற இனத்தைச் சேர்ந்த நாய் கடித்தத்தில் அந்த சிறுவனின் உடலில் 150 தையல்கள் போடப்பட்டன. 

இந்நிலையில், வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை காசியாபாத் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பிட்புல், ரோட்வெய்லர், டோகோ அர்ஜென்டினோ போன்ற வகையைச் சேர்ந்த நாய்களை வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஒரு வீட்டில் ஒரு நாய் மட்டுமே வளர்க்க வேண்டும், உரிமையாளர்கள் நாய் வளர்ப்பதற்கான லைசென்சை மாநகராட்சியில் இருந்து கட்டாயம் பெற்றிருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே அழைத்து வரும் நாய்களுக்கு அதன் வாய்ப்பகுதியில் கண்டிப்பாக வாய்மூடி அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநகராட்சி விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh kasiyabath muncipal order to pet animals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->