உத்தர பிரதேசம் : மூன்று வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது போலீசார் நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மூன்று இருசக்கர வாகனங்களில் பதினான்கு பேர் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

அதில், ஒரு வாகனத்தில் மட்டும் ஆறு பேரும் மேலும் இரண்டு வாகனத்தில், தலா நான்கு பேர் என்று மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாக பரவியதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், சாகசத்தில் ஈடுபட்டவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து பரேலி மூத்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார் சவுராசியா தெரிவித்ததாவது, "சாகசத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் கிடைத்ததும், அவர்களது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh police trouble for fourteen young boys stunt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->