உ.பி : பைக் வாங்கித் தர மறுத்த தாய்.! ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருசக்கர வாகனம் வாங்கி தர மறுத்ததால் பெற்றத் தாயை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் அப்சர் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், அந்த வாலிபர் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி, பரேலி மாவட்டத்தில் உள்ள பிரேம் நகரில் ஒரு வீட்டில் ஃபரிதா என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் முழுவதும் ரத்தக் கறை படிந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தில் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், அப்சர் கான் ஃபரிதாவின் வளர்ப்பு மகன் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, "தாய் - மகன் இருவருக்கும் இடையே இருசக்கர வாகனம் வாங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.

இந்த நிலையில், வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த, அப்சார் கான் இரும்பு தடியை எடுத்து தாய் என்றும் பார்க்காமல்  அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh son kill mother for not buy bike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->