உத்தர பிரதேசத்தில் கள்ள நோட்டுகளை பரிமாற்றம் செய்த மூன்று பேர் கைது.!
near uttar pradesh three peoples arrested for fake money exchange
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள போஜிபுரா பகுதியில் மர்ம கும்பல் ஒன்று ரூபாய் நோட்டுகளுக்கு மூன்று மடங்கு கள்ள நோட்டுகளை கொடுத்து பண பரிமாற்றம் செய்வதாக போலீசாருக்குத் தகவல் வந்துள்ளது.
அந்த தகவலின் படி, போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் மூன்று பேர் கள்ளநோட்டுகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஹர்வன்சிங் என்கிற சோனு, குர்னாம், சதாம் உசேன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்த போது ரூ.1 லட்சம் கொடுத்தால் பதிலுக்கு ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்தது தெரிய வந்தது.
மேலும், இவர்களுக்கு நேபாளம், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ளவர்களுடனும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English Summary
near uttar pradesh three peoples arrested for fake money exchange