உல்லாசமாக இருக்க பெண் தேவையா?...5 மணி நேரம் காத்திருந்த இளைஞர்!...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர், புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 13-ம் தேதி, உல்லாசமாக இருக்க பெண் தேவையா? என்று குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணிற்கு விக்னேஷ் தொடர்பு கொண்டு பேசிய போது, பெண் ஒருவர்  சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பி அதில் ஒருவரை தேர்வு செய்யும் படியும், அதற்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்றும், அதிலும் முன்பணமாக ரூ.5 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி, விக்னேஷ் ரூ.5000 பணத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். பின்னர்  அந்த பெண் முத்தியால்பேட்டை அருகே  காத்திருக்கும்படி கூறியதை அடுத்து, அங்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக அவர் காத்திருந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த இடத்திற்கு அந்த பெண் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்னேஷ் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், ஏமாற்றிய பெண் கடலூரை சேர்ந்த காயத்ரி என்பது தெரியவந்தது. பின்னர்  அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி, காயத்ரி கடந்த 6 மாதங்களில் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Need a girl to flirt with Young man who waited for 5 hours What happened


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->