நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்!
NEET UG Exam Central Govt SC
கடந்த மே 5-ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், வினாத்தாள் கசிவு காரணமாக 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட சர்ச்சைகளால் இந்த நீட் தேர்வுக்கு மறு தேர்வுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், மே 5-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மேலும், அப்படி அந்த நீட் தேர்வை ரத்து செய்வது என்பது நியாயமானதாகவும் இருக்காது என்றும் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அந்த பிராமண பாத்திரத்தில், "மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று. அப்படி அந்த நீட் தேர்வை ரத்து செய்வது என்பது நியாயமானதாகவும் இருக்காது.
மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த தேவையில்லை. ரகசியத் தன்மையை மீறும் வகையில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பாத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சதி, ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பாத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
NEET UG Exam Central Govt SC