நேபாளத்தில் திடீர் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி.!
Nepal Landslide 4 members killed
நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தப்லேஜங், பக்டாங்லங் பகுதியில் நேற்று இடைவிடாத மழை பெய்த நிலையில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் இரண்டு வீடுகள் புதைந்தன.
வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது குறித்து தகவல் அறியும் அமைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அதே குடும்பத்தினரின் 50 ஆடைகள் மற்றும் ஏராளமான கோழிகளும் நிலச்சரிவில் சிக்கி இறந்து போய்விட்டன. இதே போல் மற்றொரு வீட்டில் இருந்தவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறி உள்ளது.
அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பேரிடர் ஏற்படுகிறது. இந்த ஆண்டும் சுமார் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nepal Landslide 4 members killed