ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் நேபாள தேசிய கீதம் ஒலித்ததால் பரபரப்பு!
Nepal National Anthem was played in Rahul Gandhi yatra program
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ எனும் ஒற்றுமையாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பதூர் பகுதியில் இருந்து நடை பயணத்தை தொடர்ந்தார் ராகுல் காந்தி.
அப்பொழுது மகாத்மா காந்தி வேடமிட்ட சிறுவர்கள் ராகுல் காந்தியை வரவேற்பு வரவேற்பதற்காக காத்திருந்தனர். ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கியதும் காந்தி வேடமிட்டு சிறுவர்களும் இணைந்து ராகுளுடன் உற்சாகமாக நடந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று யாத்திரையின் முடிவில் வாசிம் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தின் போது முடிவில் ராகுல் காந்தி தேசிய கீதம் இசைக்கப்பட உள்ளதாக அறிவித்ததால் அனைவரும் எழுந்து நின்றனர். அப்பொழுது இந்திய தேசிய கீதத்திற்கு பதிலாக நேபாள தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி உடனடியாக பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதன் பின்னர் நேபாள தேசிய கீதம் நிறுத்தப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ராகுல் காந்தி பங்கேற்ற ஒற்றுமை யாத்திரையின் பொதுக் கூட்டத்தில் நேபாள தேசிய கீதம் இசைக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை என சொல்லிவிட்டு நேபாள நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
English Summary
Nepal National Anthem was played in Rahul Gandhi yatra program