ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்குப் பதிலாக, இந்தியாவின் புதிய இராணுவத் தளபதி !! - Seithipunal
Seithipunal


புதியஇராணுவ தளபதியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பதவியேற்கவுள்ளார். உபேந்திர திவேதிபதவி நியமனம் வருகின்ற ஜூன் 30ஆம் தேதி மதியம் முதல் அமலுக்கு வரும்.

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தற்போது இந்திய ராணுவத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். தற்போதைய தலைமை ஜெனரல் மனோஜ் சி. பாண்டே வருகின்ற ஜூன் 30ஆம் தேதி அன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்தியாவின் அடுத்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி கடந்த 15 டிசம்பர் 1984 இல் இந்திய இராணுவத்தின் காலாட்படையில்  தேர்வு செய்யப்பட்டார். சுமார் 40 ஆண்டுகள் திவேதியின் நீண்ட  சேவையில், லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பல்வேறு கமாண்ட்கள், அறிவுறுத்தல்கள்  மற்றும் வெளிநாட்டு நியமனங்களில் சேவை செய்து உள்ளார். 

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியின் கமாண்ட் நியமனங்களில் ஒரு படைப்பிரிவின் கமாண்ட் ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள்ஸ், பிரிகேட் 26வது பிரிவு அசாம் ரைபிள்ஸ், டிஐஜி, அசாம் ரைபிள்ஸ் மற்றும் 9 கார்ப்ஸ் ஆகியவை இதில் உள் அடங்கும். லெப்டினன்ட் ஜெனரல் த்விவேதி, ராணுவத்தின் துணைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, டைரக்டர் ஜெனரல் காலாட்படை மற்றும் கடந்த 2022-2024 வரை தலைமை அதிகாரியாக வடக்குக் கமாண்டில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி இந்தியாவின் சைனிக் பள்ளி ரேவா மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றிலும் மேலும் அமெரிக்க ராணுவ போர் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர். லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர த்விவேதி வெலிங்டன் மற்றும் ராணுவப் போர் கல்லூரி ஆகியவற்றிலும் பட்ட படிப்புகளை முடித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new army general appointed for indian army


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->