ஒரு பக்கம் ரூ.38 கோடி ஹவாலா மோசடி; மறுபக்கம் கணவர் விவாகரத்து நோட்டிஸ்; புதிய சிக்கலில் ரன்யா ராவ்..!
New complaint against actress Ranya in Rs 38 crore hawala scam
தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் புதிய மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். இவர், மார்ச் 03-ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு வந்தபோது, 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான 14.2 கிலோ, கடத்தல் தங்கக் கட்டிகளுடன் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, நடிகை ரன்யா ராவ், அவரது நண்பர் தருண் ராஜு, கடத்தல் தங்கத்தை விற்க உதவிய நகை வியாபாரி ஷகில் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பில், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வருவதோடு, ஹவாலா வழியில் பணத்தை மாற்றும் வேலையிலும் ரன்யா ராவ் ஈடுபட்டுள்ளதாகவும், அவருக்கு ஷகில் ஜெயின் உடந்தையாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஜனவரியில் 11.5 கோடி ரூபாய் மதிப்பிலான 14 கிலோ தங்கம், 55 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தையும், பிப்ரவரியில் 11.8 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கம், 11.25 கோடி ஹவாலா பணத்தையும் துபாயில் இருந்து ரன்யா ராவ் கொண்டு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மொத்தத்தில் துபாயில் இருந்து 40 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ தங்கம், 38 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பெங்களூருக்கு ரன்யா ராவ் கொண்டு வந்துள்ளதாகவும், இந்த ஹவாலா பணத்தை மாற்றுவதற்கும், தங்கத்தை விற்பனை செய்யவும், அவருக்கு ஷகில் ஜெயின் உதவி செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒவ்வொரு ஹவாலா பரிமாற்றத்துக்கும் தலா, 55,000 ரூபாய் கமிஷனாக ரன்யா பெற்றுள்ளதாகவும், அவரது வீட்டில் சிக்கிய ரூ.2.67 கோடி பணம் ஹவாலா பணமாகத்தான் இருக்கும் வேண்டும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரன்யாவுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது கணவர் ஜதின் விவாகரத்து கேட்டு பெங்களூரு சாந்திநகரில் உள்ள, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திருமணம் ஆனதில் இருந்தே, ரன்யாவுக்கும், ஜதினுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது தங்கம் கடத்தல் சிக்கி குடும்ப மானத்தை வாங்கியதால், ரன்யாவை விவாகரத்து செய்ய ஜதின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
New complaint against actress Ranya in Rs 38 crore hawala scam