குடியரசு தலைவர் நியமித்த புதிய ஆளுநர்கள்.. முழு விவரம் இதோ..!!
New governor which states president to be appointed
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய ஆளுநராக ரமேஷ் பாசில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச ஆளுநராக கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கிம் மாநில ஆளுநராக லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநில ஆளுநராக குலாப்சன் கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று இமாச்சலப் பிரதேச ஆளுநராக சிவ பிரதாப் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர பிரதேச ஆளுநராக சமீபத்தில் ஓய்வு பெற்ற பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிபதி அப்துல் நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில ஆளுநராக இருந்த பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த சுஷ்ரி அனுஷ்யா உய்க்யே மணிப்பூர் ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநில ஆளுநராக இருந்த பஹு சவ்ஹான் மேகாலயா ஆளுநராகவும், ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பீகார் மாநில ஆளுநராகவும், அருணாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த பி.டி மிஸ்ரா லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
New governor which states president to be appointed