இன்று தாக்கல் செய்யப்படுகிறது புதிய வருமானவரி மசோதா..!
new income tax bill passed in parliment
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலின் போது எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அந்த அறிவிப்பின் படி, புதிய வருமான வரி மசோதா 2025, நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வருமான வரி மசோதாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:-

"புதிய வருமான வரி மசோதாவில் மொத்தம் 536 பிரிவுகள் உள்ளன. தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன. அவை புதிய சட்டத்தில் 16-ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதே சமயம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களை கொண்டதாக இருக்கும்.
இந்த மசோதாவில் முன்மொழியப்பட்ட சட்டத்தின்படி, குறைக்கப்பட்ட வரி தகராறுகளுக்கு பங்கு விருப்பத்தேர்வுகள் மீதான தெளிவான வரிவிதிப்பு சேர்க்கப்பட்டுள்ளது,''வருமான வரிச் சட்டம் 1961-ல் வருமான வரித்துறை பல்வேறு நடைமுறை விஷயங்கள், வரித் திட்டங்கள் மற்றும் இணக்க கட்டமைப்புகளுக்கு நாடாளுமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. இப்போது, மத்திய நேரடி வரிகள் வாரியம் அத்தகைய திட்டங்களை தாமாகவே அறிமுகப்படுத்த அதிகாரம் பெற்றுள்ளது, இது வரி நிர்வாகத்தை மேலும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
new income tax bill passed in parliment