திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக புதிய மொபைல் செயலி.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற வைணவ கோவிலான ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக கோவில் தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 'TTDevasthanams' என்கிற புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது. 

இதன் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் தரிசனம், தங்கும் அறைகள் மற்றும் ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செயலியை நேற்று அன்னமைய்யா பவனில், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது, 

"இது ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு யூனிவர்ஸல் செயலியாகும். இதன் மூலம் பக்தர்கள், தரிசனம், தங்கும் இடம் மற்றும் ஆர்ஜித சேவைகள் உள்ளிட்டவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும், பக்தர்களுக்கு குலுக்கல் முறை தரிசனம், தற்போதைய திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாட்கள் குறித்த விவரங்கள், என்று இந்த செயலி ஒரு வழி காட்டி போல் செயல்படும். அதுமட்டுமல்லாமல், ஒரு ஆன்மீக மொபைல் செயலி வெளி வருவது இதுதான் முதன் முறை" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new mobile application launch in tirupati elumalaiyan devasthanam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->