ஆமை வேகத்தில் சுசீந்திரம் - மணக்குடி சாலை பணி.. கண்டு கொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம்?
Suchindram Manakudy road work at a tortoise pace Will the city administration find out?
சுதந்திரமாக வீடுகளில் இருந்து வெளியிடங்களுக்கு பாதுகாப்பாக சென்று வர ஆமை வேக சாலைப் பணியினை துரிதப்படுத்தி, தரும்படி சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகத்திற்க்கும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மணக்குடி காலணி ஊர் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுசீந்திரம் - மணக்குடி கிராமத்திற்க்கு செல்லும் சாலையானது பல மாதங்களுக்கு முன்பு புதிய சாலை அமைப்பதற்க்கான பணிகள் துவங்கப்பட்டு சாலை முழுவதும் கிளறப்பட்டது.இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலோ , நடந்தோ பயணிக்க முடியாத அளவிற்க்கு காணப்படுகிறது. இந்த குறுகிய சாலையின் அருகில் குடியிறுப்பவர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தி வைத்து உள்ளதால் அவசர நிலையில் கூட பிற வாகனங்கள் மணக்குடி கிராமத்திற்க்கு செல்ல முடியாத சூழல் ஏற்ப்பட்டு வருகிறது .
மேலும் அகலமான இந்த சாலையினை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் சாலையில் எதிரில் வரும் வாகனங்களுக்கு கூட வழி விட முடியாத நிலையில் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ , மாணவிகள் உட்பட பிற பணிகளுக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்க்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இரவு நேரம் இச்சாலையில் விளக்குகள் சரிவர எரியாத காரணத்தால் விஷ ஜந்துக்கள், மற்றும் மது ப்ரியர்கள் இச்சாலையினை சகஜமாக தங்களுக்கென்று சர்வ சுதந்திரமாக இச் சாலையினை பயன்படுத்தி சுகம் அனுபவித்து வருகின்றனர் . முக்கியமாக காக்க மூர் - மணக்குடி செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு ஆங்காங்கே வயல் வெளிகளில் அமர்ந்து மது அருந்துவது , கஞ்சா , உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை உபயோகப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இதனால் மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் மாலை ஆறு மணிக்கு மேல் இச்சாலையில் பிற நபர்களின் துணையின்றி தனியாக தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கே மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மணக்குடி கிராமம் மற்றும் காடேற்றி கிராமத்தையும் இணைக்கும் வயல் வழிப்பாதையானது தற்போது ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத வகையில் ஏதோ தீவில் சிக்கி கொண்டு தவிப்பதைப் போன்று பரி தவித்து வருகின்றனர்.
எனவே மணக்குடி கிராம மக்கள் தங்கள் சுதந்திரமாக வீடுகளில் இருந்து வெளியிடங்களுக்கு பாதுகாப்பாக சென்று வர ஆமை வேக சாலைப் பணியினை துரிதப்படுத்தி, சாலை ஓரம் மின் விளக்குகளை பழுது நீக்கி, அப்பகுதியில் உள்ள சாலையோர , மற்றும் வயல்வெளி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்க்கும் , சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகத்திற்க்கும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் மணக்குடி காலணி ஊர் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
English Summary
Suchindram Manakudy road work at a tortoise pace Will the city administration find out?