பிரதமர் மோடி கையில் சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல்! அமித் ஷா வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!
new parliament chola sengol in pm modi hand
சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தற்கு சான்றாக சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோல் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம்" என்று தெரிவித்தார்.
மேலும், சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோலை குறிப்பிட்டும் அமித்ஷா தனது முக்கிய கருத்துகளை தெரிவித்தார். அதில், குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து சோழ பரம்பரை, கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியின் அடையாளமாக இருந்த சோழ சாம்ராஜ்யத்தின் செங்கோலை, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அந்த செங்கோல் இந்தியாவின் சுதந்திரத்தின் அடையாளமாக அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டு தெரிவித்தார்.
சோழ சாம்ராஜ்யத்தின் அந்த செங்கோல் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
English Summary
new parliament chola sengol in pm modi hand