புதிய பாராளுமன்றத்திற்கு அம்பேத்கர் பெயர் : மத்திய அரசுக்கு சிக்கலை உண்டாக்கிய தீர்மானம்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் புதிய பாராளுமன்றத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பிரதமர் மோடி கடந்த மாதம், அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். 

தற்போது, அந்த கட்டிடத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று தெலுங்கானா மாநில சட்டசபையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயரை வைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கு முன்னதாக அந்த தீர்மானத்தை முன் மொழிந்த மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமராவ், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரை புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதேபோன்று, மத்திய அரசு அறிவித்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை  அம்மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி, இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த அவர், இந்த மசோதா விவசாயிகள், ஏழைப் பிரிவினர் மற்றும் மின்துறை ஊழியர்களின் நலன்களுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new parliament name problem central government face


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->