புதிய பாராளுமன்றத்தை பார்க்க வந்த நடிகைகள் - திரைப்பட விளம்பரமா? என கிண்டலடித்த எதிர்க்கட்சி எம்.பி.! - Seithipunal
Seithipunal


புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கி முதல் நாளில் பெண்களுக்காக 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை பாராளுமன்றத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வரவழைக்கப்பட்டு வருகின்றனர். 

அவ்வாறு வருபவர்களை அதிகாரிகள் அழைத்துச் சென்று புதிய பாராளுமன்றத்தை சுற்றி காட்டி இரு அவைகளின் மாடங்களிலும் அமர வைத்து பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை கவனிக்க செய்கிறார்கள். 

அந்த வகையில் நடிகைகளும் அழைக்கப்படுகின்றனர். கடந்த 19ஆம் தேதி இந்தி நடிகைகள் கங்கனா ராணாவத், ஈஷா குப்தா, பாடகி சப்னா சவுத்ரி உள்ளிட பலர் அழைக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று நடிகைகள் குஷ்பூ, தமன்னா மற்றும் திவ்யா தத்தா புதிய பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை சுற்றி கூட்டம் கூடி அவர்களுடன் பலரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

பின்னர் நடிகைகள் புதிய பாராளுமன்றத்தை சுற்றி பார்த்து விட்டு, நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பார்த்தனர். 

நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் மற்ற நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவற்றை பதிவிட்டுள்ளார்.  

மேலும் 'பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா புதிய பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை நேரில் பார்த்த பெருமை எனக்கு கிடைத்தது. 

என்னை அழைத்ததற்கு மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கும் அனுராக் தாக்குருக்கும் நன்றி' என பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகை தமன்னா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்திருப்பதாவது, 'இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நினைக்கிறேன். 

அரசியலில் திரை துறையைச் சேர்ந்தவர்கள் நுழைவது கடினம் என நினைக்கிறார்கள். ஆனால் பெண் இட ஒதுக்கீடு மசோதாவில் சாமானியர்கள் கூட அரசியலுக்கு வர ஊக்குவிக்கும் வகையில் உள்ளது' என்றார். 

இதற்கிடையே நடிகைகள் பாராளுமன்றத்திற்கு வருவதை எதிர்க்கட்சி எம்.பிகள் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி அவரது எக்ஸ் தளத்தில், திரைப்பட விளம்பரங்கள் கூட பாராளுமன்றத்தில் நடக்கின்றன என கிண்டலாக பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Parliament Visit  Actresses 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->